சிறந்த திரைப்பட விருது.. நியூயார்க்கில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’ திரைப்படம்!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி அங்கம்மாள் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கீதா கைலாசம், வட சென்னை, மெய்யழகன் படத்தின் சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த திரைப்பட விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படத்திறகான விருது வென்ற அங்கம்மாள்..
2025-ம் ஆண்டுக்கான நியூயார்க் 'இந்திய திரைப்பட விழா' சமீபத்தில் நடைபெற்ற நிலையில், விழாவின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழாவின் பங்கேற்ற 'சிறந்த திரைப்படம்' விருதை வென்ற விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'அங்கம்மாள்' திரைப்படம் வென்றுள்ளது.
இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பெருமாள் முருகனின் சிறுகதை திரைப்படமாக முதல்முறையாக உருவாக்கப்பட்ட நிலையில், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.