மணிரத்னம் இயக்கும் படத்தில் மலையாள இளம் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய்சேதுபதி, அரவிந்த சாமி, சிம்பு என மல்டி ஸ்டார் கூட்டணியில் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப் படத்தின் முறையான அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. இதில் மேலும் அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், அதிதி ராவ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் என பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அவரது கால்ஷீட் சரியாக ஒத்துவராததால் அவர் ஒதுங்கிக் கொண்டார். அவர் நடிக்காதது பெரிய இழப்பாக கூறப்பட்டது.
இந்நிலையில் ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் பரவலாக கவனிக்கப்பட்ட அப்பானி ஷரத் இப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தச் செய்தி வெளியான உடனேயே ட்விட்டர் ட்ரெண்ட்டில் ஷரத் இடம் பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே லிங்குசாமியின் ‘சண்டக்கோழியி2’வில் நடித்து வருகிறார்.