நடிகை ஆண்ட்ரியா சொல்லும் 5 ஜூஸ் டிப்ஸ்

நடிகை ஆண்ட்ரியா சொல்லும் 5 ஜூஸ் டிப்ஸ்
நடிகை ஆண்ட்ரியா சொல்லும் 5  ஜூஸ் டிப்ஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா அண்மையில் அதிலிருந்து மீண்டார். இந்த நிலையில் அவர் தற்போது தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் குடிக்கும் முக்கியமான 5 ஜூஸ்களை பட்டியலிட்டுள்ளார்.

கேரட்/ஆரஞ்சு/ இஞ்சி/ மஞ்சள் கலந்த ஜூஸ்- உங்களுக்கு ஜலதோஷம் இருந்தால் இந்த ஜுஸை தாராளமாக குடிக்கலாம். சிறந்த நிவாரணியாக இது செயலாற்றும்.

செலரி செடி/கிரீன் ஆப்பிள்/ வெள்ளரி கலந்த ஜூஸ்: இந்த ஜூஸ் உங்க உடலை சுத்தம் செய்றதுல முக்கிய பங்காற்றும். நீங்க இரவு ஜங்க் புட் எடுத்துக்கிட்டா இந்த ஜூஸை பருகலாம்

வே புரோட்டீன்/ ப்ளூ பெர்ரி/ சியா விதைகள் கலந்த ஜூஸ் : பொதுவா இதை ஜூஸூனு சொல்ல முடியாது. புரோட்டீன் பவுடர், ப்ளூ பெர்ரிஸ் கூட ஒரு ஸ்பூன் சியா விதைகளை கலந்து குடிக்கலாம். வொர்க் அவுட் முடிஞ்சதுக்கு அப்புறம் நான் இத எடுத்துப்பேன்.

பப்பாளி/ டிராகன் பழம்/ ஒரு கிண்ணம் மாதுளை கலந்த ஜூஸ் - இந்த ஜூஸை வாரத்தின் நடுவில் எடுத்துப்பேன். பப்பாளி எனக்கு பெரிசா
பிடிக்காது. அதனால டேஸ்ட்ட சமன்படுத்துறதுக்காக மாதுளை எடுத்துக்குறேன்

முலாம் பழம் ஜூஸ்: விதைகளை வெளியே எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு அடித்து அப்படியே பருகலாம். டேஸ்டாவும், நல்ல
நீரேற்றியாவும் இருக்குறதானல, சம்மருக்கு ரொம்ப உகந்த பானமா இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com