இந்தப் பக்கம் ஆர்மி கேர்ள், அந்தப் பக்கம் பாமர பெண்: அசத்தும் ஆண்ட்ரியா
தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்பரூபம்2 படத்தில் குதிரை சவாரி செய்த அனுபவம் பற்றி நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னையில் பாமரத்தனமான பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா, நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2வில் ஆர்மி கேர்ளாக நடித்து வருகிறார். அதற்கான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் குதிரையில் சவாரி செய்வதை போல காட்சி பதிவாகி உள்ளது. அவர் ராணுவ உடையில் கமல்ஹாசனுடன் சென்னை ஆஃபீசர் அகாடெமியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படங்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. அதை தவிர்த்து ஆண்ட்ரியா மேலும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு நடிகையாக குதிரை சவாரி பயிற்சி மூலம் நான் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன். அதற்காக விஸ்வரூபம் 2க்கு நன்றி. இதன் மூலம் நான் ஒரு புதிய பொழுதுப்போக்கை கண்டுப் பிடித்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கூடவே வடசென்னை புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு ‘எல்லோரும் சந்திராவை சந்திக்க காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே சமயத்தில் இந்தப் பக்கம் பவர்ஃபுல்லான கேர்ள். அந்தப் பக்கம் பாமரத்தனமான பெண் என இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் பயணம் செய்து வரும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் அவரது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவள், துப்பறிவாளன், தரமணி என பல தரமான பாத்திரங்களில் அவர் ஜொலிக்க ஆரம்பித்திருப்பதால் நம்பிக்கைக்குரிய நடிகையாக அவர் படிப்படியாக முன்னேறிக்கொண்டே போகிறார் என அவரை பலர் பாராட்டியுள்ளனர்.

