அந்தாதூன் ரீமேக்: தபுவாக தமன்னா!

அந்தாதூன் ரீமேக்: தபுவாக தமன்னா!

அந்தாதூன் ரீமேக்: தபுவாக தமன்னா!
Published on

அந்தாதூன் தெலுங்கு ரீமேக்கில் தபு வேடத்தில் தமன்னா நடிக்கவிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது  ’அந்தாதூன்’ திரைப்படம். 40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த படம், சிறந்த தழுவல் படம் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை அந்தாதூன் குவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்க நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்கள் எழுதியும் முடித்துவிட்டார். கொரோனா சூழலால் படத்தின் படபிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெலுங்கில் அந்தாதூன் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஆயூஷ்மான் குரானா பாத்திரத்தில் நிதினும், தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தேவாக நபா நடேஷும் நடிக்கிறார்கள். இப்படத்தை மெர்லபகா காந்தி இயக்குகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com