\
பெண்களின் மருத்துவப் பிரச்சனைகளை பேசும் 'ஆண்டாள்'

பெண்களின் மருத்துவப் பிரச்சனைகளை பேசும் 'ஆண்டாள்'

பெண்களின் மருத்துவப் பிரச்சனைகளை பேசும் 'ஆண்டாள்'
Published on

"பீச்சாங்கை" திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால், அந்தப் படத்தின் ஹீரோவான கார்த்திக்க்கு, நல்ல பெயர் கிடைத்தது. இப்போது இவர் எழுத்தாளர் வடலூர் ஆதிரையின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஆண்டாள்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பீரியட் திரைப்படமான இதில் 1980-களில் பெண்கள் எதிர்கொண்ட மருத்துவ ரீதியான பிரச்சனைகள் குறித்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தெருக் கூத்து கலைஞராக நடிக்கிறார் கார்த்திக். இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை உஷா எலிசபத் சூரஜ் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் கதை இவரது கதாப்பாத்திரத்தை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த மணீஷா.  ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com