‘ஆண்டாள்’ அனுஷ்காவின் பிரமாண்ட நாயகன்!

‘ஆண்டாள்’ அனுஷ்காவின் பிரமாண்ட நாயகன்!

‘ஆண்டாள்’ அனுஷ்காவின் பிரமாண்ட நாயகன்!
Published on

நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்து தெலுங்கில் ஹிட்டான படம், ’ஓம் நமோ வெங்கடேசயா’. கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ள இந்தப் படம், ’பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட படம் இது.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. மரகதமணி இசையமைத்துள்ளார். வசனம், பாடல்களை டி.எஸ். பாலகன் எழுதியுள்ளார். கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் படத்தை வெளியிட, ஜோஷிகா பிலிம்ஸ் துரைமுருகனும், நாகராஜனும் திட்டமிட்டுள்ளனர்.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேகங்களுக்கான விளக்கங்களை இந்தப்படம் சொல்லுமாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com