\
மதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்

மதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்

மதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்
Published on

பெற்றோர்களை எதிர்ப்பை மீறி காதலனை தொகுப்பாளர் மணிமேகலை கரம்பிடித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலமான வீஜே மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவருக்கு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட மணிமேகலைக்கும் அவரது நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் மற்றும் காதலன் ஹுசைனின் உறவினர்கள் முன்னிலையில் பதிவு திருமணமாக நடைபெற்றது. 

இது தொடர்பான ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை திருமண கோலத்தில் உள்ள படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், “ஹூசைனும் நானும் இன்று திடீர் திருமணம் செய்துகொண்டோம். பதிவுத் திருமணம். என் தந்தையின் மனத்தை மாற்றமுடியவில்லை. எல்லை மீறி போனதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். அவர் இந்த முடிவை ஒருநாள் புரிந்து கொள்வார் என்று நிச்சயம் நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹூசைன். ஸ்ரீராம ஜெயம், அல்லா” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com