\
’நீங்க இல்லாம நானில்ல’: சிம்புவின் புது ரூட்

’நீங்க இல்லாம நானில்ல’: சிம்புவின் புது ரூட்

’நீங்க இல்லாம நானில்ல’: சிம்புவின் புது ரூட்
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் இன்று வெளியானது.

அச்சம் என்பது மடமையடா படத்துக்குப் பின்னர் 6 மாத இடைவெளியில் சிம்பு படம் வெளியாவதால், அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதுமட்டுமில்லாமல், டிரிபிள் ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தில் 3 வேடங்களில் சிம்பு நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தனர். டிரிபிள் ஏ படம் இன்று வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் டைட்டில் கார்டில் சிம்புவின் பெயருக்கு முன்னால் இருந்த யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கிவிட்டு, நீங்க இல்லாம நானில்ல என்ற அடைமொழியுடன் எஸ்டிஆர் (STR) என்ற பெயர் இடம்பெறுகிறது. இரண்டு பாகங்களாக டிரிபிள் ஏ படம் வெளியிடப்படும் என்று சிம்பு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com