\
நடிகை சாவித்திரி படத்தினை விளக்கேற்றி வழிபட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்திரி படத்தினை விளக்கேற்றி வழிபட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்திரி படத்தினை விளக்கேற்றி வழிபட்ட கீர்த்தி சுரேஷ்
Published on: 

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மறைந்த சீனியர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இதற்கு நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மூத்த நடிகை சாவித்திரியின் புகைப்படம் ஒன்றிற்கு அவர் விளக்கேற்றி மரியாதை செலுத்தும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

அத்துடன் அதில் அவர்,  “கடந்த ஒரு வருஷமாக தொடர்ந்த அற்புதமான பயணம் நிறைவடைந்துள்ளது. மிகவும் உணர்வுபூர்வமாகக் கடந்த காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். நாக் அஸ்வின், விஜயாந்தி பிலிம்ஸ் என் மீது வைத்த நம்பிக்கைக்கு மிகப்பெரிய நன்றி. கடந்த காலம் குறித்து பெருமையோடு திரும்பிப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு. இனிமேல் பொறுத்திருக்க முடியாது, சாவித்திரியின் வாழ்க்கையை திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படம் வரும் மே 9 தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com