"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்" - எமி ஜாக்சன்

"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்" - எமி ஜாக்சன்
"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்" - எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன், தன் அருந்தவப் புதல்வன் ஆண்ட்ரியாஸின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடி, அதன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அதில் குழந்தை முகம் மலர்ந்த சிரிப்புடன் பந்தை வைத்துக்கொண்டு விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டனில் வசிக்கும் அவர், "என் அழகிய குழந்தையின் ஸ்பெஷல் டே" என்ற தலைப்பில் வீடியோவை பதிவிட்டுள்ளார். அத்துடன் குழந்தையின் முதல் பிறந்த நாள் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் எமி ஜாக்சன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எமி ஜாக்சன், தாய்மை தினத்தன்று தனக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார். 

"இந்த தாய்மை தினத்தன்று நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என் பையன் ஆண்ட்ரியாஸ் வருவதற்கு முன்பான என் வாழ்க்கையை நான் நினைவுகூரமுடியவில்லை. அதெல்லாம் அர்த்தமற்றதாக இருக்கிறது. அந்த தேவதை முகத்தையும் அழகிய சிரிப்பையும் ஒவ்வொரு நாள் காலையிலும் பார்க்கும்போது, நான் உத்வேகம் அடைகிறேன். ஓரு ரோல்மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக நான் அவனுக்காக இருக்கிறேன்" என்று அந்தப் பதிவில் எமி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.

 
 
 
View this post on Instagram

My beautiful baby boy’s special day ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com