\
ஸ்கைப் மூலம் ஹிந்தி கற்கும் எமிஜாக்சன்

ஸ்கைப் மூலம் ஹிந்தி கற்கும் எமிஜாக்சன்

ஸ்கைப் மூலம் ஹிந்தி கற்கும் எமிஜாக்சன்
Published on

ஸ்கைப் மூலம் ஹிந்தி கற்றுக் கொண்டிருப்பதாக நடிகை எமிஜாக்சன் தெரிவித்திருக்கிறார்.

ஏ.எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். இவர் ஒரு மாடல்.லண்டன் பிரஜை. தமிழ் படங்களில் அதிகமாக வாய்ப்பு இல்லாததால் இவர் தெலுங்கு பக்கம் போனார். அப்படியே ஹிந்தி  வாய்ப்பு அவரை அழைத்தது. இப்போது  மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். பெரிய பொருட் செலவில் தயாராகியுள்ள 2.ஓ படத்தில் நடித்திருக்கிறார். அதன் இறுதி கட்டப் படப்பிடிப்பு சில வாரம் முன்புதான் முடிந்தது. இதையடுத்து இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பாலிவுட் பக்கம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஹிந்தி மொழியைக் கற்க ஆரம்பித்திருக்கிறார். இதற்காக ஒரு ஹிந்தி பண்டிட்டை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் “ இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் ஹிந்தி கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன். புதிய மொழி என்பதால் சிரமமாக உள்ளது. ஆனாலும் அதை முறைப்படி கற்றுக் கொள்வேன். 2.ஓ ப்ரொமோஷன் வேலைகளுக்காக பல நாட்டிற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் ஸ்கைப் வசதி மூலம் இடைவெளி விழாமல் ஹிந்தி கற்றுக்கொண்டு வருகிறேன்' என்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com