’2.0’ ஷூட்டிங் முடிந்தது: லண்டன் பறந்தார் எமி ஜாக்சன்

’2.0’ ஷூட்டிங் முடிந்தது: லண்டன் பறந்தார் எமி ஜாக்சன்

’2.0’ ஷூட்டிங் முடிந்தது: லண்டன் பறந்தார் எமி ஜாக்சன்
Published on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துவரும் படம், ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இதில் எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்தது. இத்தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார் எமி ஜாக்சன்.

இதுபற்றி அவர் தரப்பில் விசாரித்தபோது, ‘2.0’ படத்தில் எமி ஜாக்சன் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. லண்டன் சென்றுள்ள எமி ஜாக்சன், ஹாலிவுட்டில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது’ என்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com