\
அமிதாப்பச்சனுக்கு அமலாக்கத் துறை சம்மன்?

அமிதாப்பச்சனுக்கு அமலாக்கத் துறை சம்மன்?

அமிதாப்பச்சனுக்கு அமலாக்கத் துறை சம்மன்?
Published on: 

பனாமா ஆவணங்கள் புகார் குறித்த விசாரணையில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி தொடர்பாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் தாராளமாக்கப்பட்ட டொபசிட் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் மோசடி புகார்கள் வெளியாகின. 

அதன் மீது அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு அமிதாப் விளக்கம் அளித்துள்ள நிலையில், அதன் மீதான விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் முறைகேடான வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்து விவரங்களை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com