விலா எலும்பு முறிவு? - ’புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அமிதாப் பச்சன்

விலா எலும்பு முறிவு? - ’புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அமிதாப் பச்சன்
விலா எலும்பு முறிவு? - ’புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அமிதாப் பச்சன்

ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் புராஜெக்ட் கே. பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்தது சி.டி. ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வீடு திரும்பிவிட்டதாக அவர் ட்விட் செய்துள்ளார். 

இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில், "ஹைதராபாத்தில் ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பில், சண்டைக்காட்சியின் போது, எனக்கு காயம் ஏற்பட்டது. விலாவின் குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டது. மேலும் தசைநார் கிழிந்துள்ளது. அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் சி.டி ஸ்கேன் எடுத்த பிறகு அவர்களின் ஆலோசனைக்குப் பிறகு விமானம் மூலம் வீடு திரும்பினேன். சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவேன். வலிக்கு சில மருந்துகளை பயன்படுத்துகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்ததையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com