அமிதாப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனி விமானத்தில் மும்பை வருகிறார்!

அமிதாப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனி விமானத்தில் மும்பை வருகிறார்!

அமிதாப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனி விமானத்தில் மும்பை வருகிறார்!
Published on

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனி விமானத்தில் அவர் மும்பைக்கு அழைத்து வரப்படுகிறார்.

இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இப்போது ’தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ (Thugs of Hindostan) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆமிர்கான், கேத்ரினா கைஃப் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக ஜோத்பூரில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை வரை ஷூட்டிங் நடந்தது. காலை 5 மணிக்குத்தான் தூங்கச் சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனி விமானத்தில் ஜோத்பூரில் இருந்து அவரை மும்பை அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் தயாரிப்பு நிர்வாகி ராகவேந்திரா கூறும்போது, ‘ஜோத்பூரில் கடும் வெயில். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஏதுமில்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com