\
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப் பச்சன்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப் பச்சன்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப் பச்சன்
Published on

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ எனது தந்தைக்கு தற்போது செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. எனவே அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்காக வேண்டுதல்கள் செய்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு ஜூலை 12-ஆம் தேதிமுதல் அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com