அமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?

அமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?
அமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?

தமிழ் சினிமாவில் நடிக்க அமிதாப் பச்சன் எப்படி சம்மதித்தார் என்று இயக்குனர் தமிழ்வாணன் விளக்கமளித்தார்.

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘உயர்ந்த மனிதன்’.  அமிதாப்பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர் நடிக்கும் நேரடி தமிழ்ப் படம் இது. எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ’கள்வனின் காதலி’யை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். 

இதுபற்றி எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, ’’இயக்குனர் கொண்டு வந்த கதைதான் அமிதாப் வரைக்கும் இந்தப் படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சனிடம் கொண்டு சென்று கொடுத்தோம். படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். கதை பிடித்திருக் கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன என்றார். விளக்கிய பின் ஏற்றுக்கொண்டு, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சம்மதித்தார்’’ என்றார் எஸ்.ஜே.சூர்யா.

’’இந்த கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யாவிடம் சொன்னேன். அதை இந்த அளவுக்கு கொண்டு போனது அவரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனும்தான். அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது. எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும்? உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் புடன் பணிபுரிவது பாக்கியம். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம், என் இயக்கத்தில் தான் என்பதே பெருமை’ என்றார் இயக்குனர் தமிழ்வாண ன்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்  டு  இருக்கிறது. முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் சந்தித் து வாழ்த்து பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com