இந்தியாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அமிதாப் பச்சன், தன்னுடைய மரணத்திற்குப் பிறகு தனது சொத்துக்களை தனது மகள் மற்றும் மகன் சமமாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் (75). இவர் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர். இவருக்கு ஸ்வேதா என்ற மகளும் அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். அபிஷேக் பச்சன் இந்திப் படங்களில் நடித்துவருகிறார். உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் கணவர் இவர்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் நேற்று இரவு அவரது டுவிட்டர் பக்கத்தில், தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்துகளை தனது மகனும் மகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என எழுதி பதிவு செய்துள்ளார். பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என சுட்டிகாட்டியுள்ள அவர், #WeAreEqual and #genderequality என்ற ஹஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. மார்ச் 8-ல் மகளிர் தினத்தை முன்னிட்டு 'ஆணும் பெண்ணும் சமம்' என்ற தலைப்பில் நடைபெறும் சமூக வலைதள பிரச்சாரத்தில் அமிதாப் பச்சனும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.