\
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Published on

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் , மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவர், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, நேற்றிரவு அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்.

அமிதாப்புக்கு, கடந்த 1982-ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின்போது ஏற்றப்பட்ட ரத்தத்தில் ‘ஹெப்பாடிட்டீஸ் பி’ வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல் நலக்குறைவால் மும்பை சிட்டி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com