’’எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்’’ - ரசிகர்களிடம் அமீர்கான் வேண்டுகோள்

’’எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்’’ - ரசிகர்களிடம் அமீர்கான் வேண்டுகோள்
’’எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்’’ - ரசிகர்களிடம் அமீர்கான் வேண்டுகோள்

 எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என பாலிவுட் நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'லால் சிங் சத்தா' என்ற திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. காரணம், கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் இது போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமீர்கான், இந்த சம்பவத்தை நினைத்து உண்மையில் வருத்தப்படுவதாகவும், தயவுசெய்து தனது படத்தைப் புறக்கணிக்காமல் பாருங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com