\
அதிக டேக் எடுப்பார் அமீர்: சொல்கிறார் சந்தனத்தேவன் ஹீரோயின்

அதிக டேக் எடுப்பார் அமீர்: சொல்கிறார் சந்தனத்தேவன் ஹீரோயின்

அதிக டேக் எடுப்பார் அமீர்: சொல்கிறார் சந்தனத்தேவன் ஹீரோயின்
Published on: 

ஆர்யா, அவர் தம்பி சத்யா ஹீரோக்களாக நடிக்கும் படம், ’சந்தனத்தேவன்’. அமீர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி. இவர் ’பட்டதாரி’ என்ற படத்தில் நடித்தவர். 
சந்தனத்தேவன் படம் பற்றி அதிதி கூறும்போது, ‘இதில் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் மூன்று ஷெட்யூல்களிலும் பங்கேற்றுவிட்டேன். அமீர் பர்பக்‌ஷனிஸ்ட். தனக்கு திருப்தியாகும் வரை ஷாட்டை ஓகே பண்ண மாட்டார். அதற்காக எத்தனை ரீடேக் வேண்டுமானாலும் எடுப்பார். நான் மலையாளியாக இருந்தாலும் இப்போது நன்றாக தமிழ்ப்பேசக் கற்றுக்கொண்டேன். படத்தின் கதை 60-களில் நடக்கிறது. அந்தக் காலக்கட்ட தமிழில் பேச எனக்கு கஷ்டம்தான். இருந்தாலும் அர்த்தம் தெரிந்துகொண்டு தெளிவாகப் பேசிவருகிறேன்’என்கிறார் அதிதி. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com