’ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்..’ ரஜினி பாடலை ஸ்டோரியாக வைத்த அம்பிகா!
தமிழ் சினிமாவின் பிரபல சகோதரிகள் அம்பிகா–ராதா இடையிலான ஏஆர்எஸ் கார்டன் சொத்து, செக் திருட்டு மற்றும் 46, 97 கோடி ரூபாய் குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே ‘ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்’ பாடலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, தன் உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் அம்பிகா.
80ஸ் காலகட்டத்தில் தமிழ்சினிமாவின் நட்சத்திர நடிகைகளாக வலம்வந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும். கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர்கள், தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர்கள். தற்போது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுவருகிறார்கள்.
இந்தசூழலில் இருவருக்கும் இடையே தங்களுடைய குடும்ப சொத்தான ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. இந்த விசயத்தில் இருவருக்கும் பணப்பிரச்சனை விருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்ற நடிகை ராதா, தன் வீட்டில் இருந்த செக்கை திருடி அம்பிகா மற்றும் அவரது தம்பி 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக கண்ணீர் மல்க புகார் அளித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த அம்பிகா, ராதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தான் தங்களுக்கு 97 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும், உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்லவேண்டிவரும் என பேசியுள்ளார்.
இப்படியான சூழலில் தான் ரஜினி உடன் இணைந்து நடித்திருந்த படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்’ பாடலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக நடிகை அம்பிகா வைத்துள்ளார். வீடியோவுடன் ‘நான் முயற்சி செய்தேன்; பின்பு மாறிவிட்டேன்; இருப்பினும் மாறும் என நிலைத்திருந்தேன். இத்தனைக்கு பிறகும், அது போதுமானதாக இருக்கவில்லை" என எழுதியுள்ளார்.

