\
அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள 7 திரைப்படங்கள் !

அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள 7 திரைப்படங்கள் !

அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள 7 திரைப்படங்கள் !
Published on

ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்கெனவே தயாரிப்பு வேலைகள் முடிந்துள்ள 7 இந்தியத் திரைப்படங்கள் ஓடிடி முறையில் அமேசான் பிரைமில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு போன்ற காரணங்களால் திரையரங்குகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில முன்னணி நடிகர் நடிகைகளின் படங்கள் தற்போது ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட உள்ளன. தமிழில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வரும் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழில் ஏற்கெனவே சில திரைப்படங்கள் நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்டு இருந்தாலும், முன்னணி நடிகர், நடிகைகளின் படம் வெளியானது இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களின் பார்வையும் ஆன்லைன் தளங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் திரைப்படம், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ திரைப்படம் என மொத்தம் 7 திரைப்படங்கள் வரும் மாதங்களில் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளன.

மேலும் வித்யா பாலன் நடித்துள்ள "சகுந்தலா தேவி: ஹியூமன் கம்ப்யூட்டர்", இரண்டு கன்னட படங்களான "லா" "பிரனச் பிரியாணி", நடிகை அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடித்த "சோஃபியும் சுஜாதாயும்" என்ற மலையாளப் படமும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேசான் பிரைம் இந்தியாவின் தலைமை இயக்குநர் விஜய் சுப்ரமணியம் "படத்தைத் தயாரித்து தயாரிப்பாளர்களுடன் நேரடியாகப் பேசி வருகிறோம். இதுபோன்ற காலங்களில் ஓடிடியில் வெளியிடுவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்ல படைப்புகள் இதன் மூலம் மக்களிடையே நேரடியாகச் செல்லும்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com