தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமிweb

”தனுஷ் ஒரு மகா கலைஞன்.. அவரால் எப்படி..?” - பாராட்டி பேசிய அமரன் பட இயக்குநர்!

தனுஷ் ஒரு மகா கலைஞன் என அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டி பேசியுள்ளார்.
Published on

பா.பாண்டி, ராயன் முதலிய வெற்றிபடங்களை இயக்கிய நடிகர் தனுஷ், தற்போது ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

பா.பாண்டி திரைப்படத்தில் முன்னாள் காதலர்களின் சந்திப்பை வயது முதிர்ந்த பிறகு ஏற்படுத்தி கொடுத்த தனுஷ், ராயன் திரைப்படத்தில் அப்படியே முதல் படத்திற்கு மாறாக சகோதரர்களுக்கு இடையேயான கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வெற்றிப்படமாக மாற்றியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை சமகால இளைஞர்களுக்குள் நிகழும் காதல் படமாக இயக்கியுள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

தனுஷ் ஒரு மகா கலைஞன்..

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் முதலியோர் சேர்ந்து நடித்துள்ளனர். நடிகை பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளன.

படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், NEEK படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக தனுஷின் அடுத்தடுத்த படத்தின் இயக்குநர்களான அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் அருண் விஜய் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பெயரே கவிதை போல இருக்கு. தனுஷ் சாரை இந்த படத்தின் தொடக்கத்தின் போது 2023-ல் சந்தித்தேன், தற்போது படம் வெளியாகவிருக்கிறது. இடையில் கிட்டத்தட்ட 14 மாதங்கள் தான் இருந்தன, அதற்குள் ராயன் படத்தை இயக்கிமுடித்து வெளியிட்டு ஹிட்டையும் கொடுத்துவிட்டார், அதனுடன் சேர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என அடுத்தடுத்த இரண்டு படங்கள் இயக்குநராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து மூன்று படங்களுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

எப்படி அவர் இவ்வளவு வேலைப்பளுவிலும் இதையெல்லாம் செய்துமுடிக்கிறார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. தனுஷ் சார் ஒரு மகா கலைஞன் என்று நினைக்கிறேன்” என பாராட்டி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com