\
அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை

அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை

அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை
Published on

அமலாபால் நடித்துள்ள 'ஆடை' திரைப்படம் இன்று வெளியாகவில்லை. 

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் ‘ஆடை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். 

மேலும் இப்படத்தில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே இந்தப் படத்தில் நடிகை அமலாபால், ஆடை இல்லாமல் நடித்துள்ளதால் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தயாரிப்பாளர், பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை திரும்பி செலுத்தாததால், படத்தை வெளியிடுவதற்கான KDM எனும் குறியீட்டெண் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே அறிவித்தபடி இன்றைய தினம் 'ஆடை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com