\
யு-டியூப்பில் இருந்து அமலா பால் வீடியோ நீக்கம்!

யு-டியூப்பில் இருந்து அமலா பால் வீடியோ நீக்கம்!

யு-டியூப்பில் இருந்து அமலா பால் வீடியோ நீக்கம்!
Published on

நேற்று வெளியான அமலாபால் நடித்த திருட்டுப்பயலே-2 படத்தின் அச்சுக்கு புச்சுக்கு பாடல் வீடியோ பாடல் யு-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

விரும்புகிறேன், பைவ்ஸ்டார், கந்தசாமி, திருட்டுப்பயலே படங்களைத் தொடர்ந்து சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருட்டுப்பயலே-2. இதில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அச்சுக்கு புச்சுக்கு பாடல் இணையதளத்தில் நேற்று வெளியானது. 

அமலா பால் நடித்துள்ள இந்தப்படலின் வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன்  பார்த்து ரசித்து வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. எதற்காக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் இது சேலை கடை விளம்பரம் போல் உள்ளது என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com