தடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்!

தடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்!

தடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்!
Published on

நடிகை அமலா பால் அடுத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். 

’ராட்சசன்’ படத்துக்குப் பிறகு ’அதோ அந்த பறவை போல’, ’ஆடை’, மலையாளத்தில், ’ஆடு ஜீவிதம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடி கை அமலா பால். இதையடுத்து அவர் நடிக்கும் படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் இயக்கும் அந்தப் படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார் அமலா பால். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்துக்கு அபிலாஷ் பிள் ளை கதை எழுதுகிறார்.

’’இது தடயவியல் புலனாய்வு திரில்லர் படம். ஒரு மர்மமான வழக்கைத் தீர்க்க, ஹீரோயின் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை. கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் கையாண்ட சில உண்மையான வழக்குகளை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்குகிறோம். அவருடன் நானும் அபிலாஷ் பிள்ளையும் 6 மாதங்கள் கலந்துரையாடி கதையை உருவாக்கி இருக்கி றோம். தடய அறிவியல் மருத்துவம் பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் பார்வையிட்டோம்’’ என்றார் அனூப் பணிக்கர்.

அமலா பாலுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங், மார்ச் மாதம் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத் தூரில் மொத்த படமும் படமாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com