
நடிகை அமலாபால் அளித்த புகாரின்பேரில் தொழிலதிபர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தை இருந்த அவரைக் கைது செய்த காவல்துறை, இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன ஊழியரான பாஸ்கரையும் கைது செய்தது.
அதைத்தொடர்ந்து, இருவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அமலாபால் அளித்த புகாரின் பேரில் தொரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.