சினிமா
விஜய்-யை விட்டு முழுமையாக பிரிந்தார் அமலாபால்..!
விஜய்-யை விட்டு முழுமையாக பிரிந்தார் அமலாபால்..!
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்-க்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இயக்குனர் விஜய்-க்கும் நடிகை அமலாபாலு-க்கும் 2014 ஜூனில் திருமணம் நடந்தது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 2016 ஆகஸ்ட் மாதம், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி இருவரும் மனு அளித்தனர்.
பிரிவுக்கான காரணம் குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை என்றாலும், சினிமாவில் அமலாபால் நடிப்பதை விஜய்-யின் குடும்பத்தினர் விரும்பாது தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இயக்குனர் விஜய்-யின் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் அமலாபால் நடித்துள்ளார்.