ஒரே நாளில் கமல் தமிழகத்தை காப்பாற்றி விடுவார்: அல்போன்ஸ் புத்திரனின் அதீத நம்பிக்கை

ஒரே நாளில் கமல் தமிழகத்தை காப்பாற்றி விடுவார்: அல்போன்ஸ் புத்திரனின் அதீத நம்பிக்கை

ஒரே நாளில் கமல் தமிழகத்தை காப்பாற்றி விடுவார்: அல்போன்ஸ் புத்திரனின் அதீத நம்பிக்கை
Published on

நடிகர் கமலஹாசன் தமிழகத்தை ஒரு நாளில் காப்பாற்றி விடுவார் என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்  கூறியுள்ளார். 

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், ’முதல்வன் படம் போல ஒரு வாய்ப்பு அமைய விரும்புகிறேன்... கமலஹாசன் ஒருநாள் முதலமைச்சராக வேண்டும். அப்படி அமைந்தால் அவர் தமிழகத்தை காப்பாற்றி விடுவார்.  அதையும் ஒரே நாளில் அவர் செய்துவிடுவார்.  எனது நம்பிக்கை விரைவில் மகிழ்ச்சியாக மாறும். அவரது புதுமையான திட்டங்களால் அரசை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளில் இரட்டை வரி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கங்கள் மூடப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு திரைப்பிரபலங்களும்  ஜிஎஸ்டிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அல்போன்ஸ்புத்திரன் கமல் ஒருநாள் முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com