”எனக்கு கொரோனா நெகட்டிவ்” - குழந்தைகளை ஆசையாக கட்டி அணைத்து நெகிழ்ந்த அல்லு அர்ஜுன்!
15 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழந்தைகளை நெகிழ்ச்சியோடு கொஞ்சி மகிழும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் விரைவில் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது. ஹீரோ அறிமுக டீசர் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.
வீட்டியேயே தனிமைப்படுத்திக்கொண்ட அல்லு அர்ஜுனுக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால், தனிமைப்படுத்திக்கொண்ட 15 நாட்களுக்குப் பிறகு அறையிலிருந்து வெளியில் வந்து தனது குழந்தைகளை பார்த்து “எனக்கு இப்போது நெகட்டிவ்” என்று உற்சாகத்தில் கத்தி குழந்தைகளை கட்டி அணைக்கும் நெகிழ்ச்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது