Allu Arjun teams up with Basil Joseph for his 25th film
Allu Arjun, Basil JosephAA25

சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜூன்.. பேசில் ஜோசப் இயக்கம்? | AA25 | Allu Arjun | Basil Joseph

அல்லு அர்ஜுன் இப்போது அட்லீ இயக்கத்தில் `AA 22' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `AA 23' படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து த்ரி விக்ரம் உடன் இணைந்து `AA 24' படத்தில் நடிக்க உள்ளார்.
Published on

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பேசில் ஜோசப். இவர் சமீபத்தில் நடித்த `Maranamass', `Ponman', `Nunakkuzhi', `Falimy', `Jaya Jaya Jaya Jaya Hey' எனப் பல படங்கள் வரவேற்பை பெற்றன. நடிகராக இவர் வரவேற்கப்படும் அதேநேரத்தில் இயக்குநராகவும் கவர்ந்தவர் பேசில். `Kunjiramayanam', `Godha', `Minnal Murali' என இவர் இயக்கிய மூன்று படங்களும் பெரிய ஹிட்.

இப்போது இவர் இயக்குநராக களம் இறங்கவுள்ள படத்தை பற்றிய தகவல் உலவி வருகிறது. அல்லு அர்ஜூனின் 25ஆவது படத்தை பேசில் ஜோசப்தான் இயக்கப் போகிறார் எனவும், இது ஒரு சூப்பர் ஹீரோ கதை எனவும் சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜுன் இப்போது அட்லீ இயக்கத்தில் `AA 22' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `AA 23' படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து த்ரி விக்ரம் உடன் இணைந்து `AA 24' படத்தில் நடிக்க உள்ளார்.

Allu Arjun
Allu Arjun

அல்லு அர்ஜூன் - பேசில் கூட்டணியில் உருவாகும் இப்படம் சக்திமான் கதையாக இருக்கலாம் எனவும் ஒரு தகவலாக உருவாகிறது. ஏற்கெனவே இந்தக் கதையை ரன்வீர் சிங் நடிப்பில் படமாக முயற்சித்தார் பேசில். ஆனால் இப்போது அந்தக் கதைதான் அல்லு அர்ஜுனிடம் சொல்லி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் அல்லு அர்ஜூன் சகோதரர் அல்லு சிரிஷ் திருமண வரவேற்பில் பேசில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் வருகிறது. அதனை முன்னிட்டு இந்தப் பட அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Allu Arjun teams up with Basil Joseph for his 25th film
"பாலு மகேந்திரா சார் சொன்னதை வாழ்க்கையில் கடைபிடிப்பவர் லெஜெண்ட் சரவணன்!" - துரை செந்தில்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com