வெளியீட்டுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

வெளியீட்டுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

வெளியீட்டுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'
Published on

நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படம் வெளியாவதற்கு முன்பே ரூ.250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அல்லு அர்ஜுனின் முதல் பான் இந்திய திரைப்படமான 'புஷ்பா' டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் சினிமா பயணத்தில் இதுவரை 'புஷ்பா' தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே 'அலா வைகுந்தபுரமுலோ' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு 'புஷ்பா' படத்தில் இணைந்துள்ளனர்.

'அலா வைகுந்தபுரமுலோ' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் - 1 பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 'புஷ்பா: தி ரைஸ்', படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com