'புஷ்பா' வெற்றி எதிரொலி: அட்லீயுடன் இணைய அல்லு அர்ஜூனுக்கு சம்பளம் ரூ.100 கோடி?
அடுத்த படத்தில் அட்லீயுடன் இணைய அல்லு அர்ஜூன் ரூ.100 கோடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் மெகாஹிட்டைத் தொடர்ந்து இந்திய திரையுலகில் நடிகர் அல்லு அர்ஜூனின் மவுசு கூடியிருக்கிறது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவான இந்த திரைப்படத்தின் அல்லு அர்ஜூனின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படத்திற்காக லைகா நிறுவனத்திடமிருந்து அட்லீக்கு ரூ.100 பெற்றுக்கொடுத்ததாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. தற்போது ஷாருக் கான் - நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் லயன் படத்தை இயக்கிவரும் அட்லீ, இந்த ஆண்டு இறுதி அல்லது 2023ஆம் ஆண்டில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.