45 நாட்கள் உழைப்பு... அல்லு அர்ஜூனுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய பிரம்மானந்தம்..!

45 நாட்கள் உழைப்பு... அல்லு அர்ஜூனுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய பிரம்மானந்தம்..!
45 நாட்கள் உழைப்பு... அல்லு அர்ஜூனுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய பிரம்மானந்தம்..!

இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், தான் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியத்தை புத்தாண்டு பரிசாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கினார்.

பிரம்மானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழி திரைப்படத்தில் பிரம்மானந்தம் நடித்த காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிக படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை விருதினையும் பிரம்மானந்தம் பெற்றுள்ளார். மேலும் கூடுதல் திறனாக ஓவியம் வரைவதையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பிரம்மானந்தம், தான் பென்சிலில் வரைந்த வெங்கடாஜலபதி புகைப்படத்தை தெலுங்கு முன்னனி நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜூன் “எனது அன்பான பிரம்மானந்தம் காருவிடம் இருந்து விலைமதிப்பில்லா பரிசை பெற்றுள்ளேன். 45 நாட்கள் வேலை. கையால் பென்சிலில் வரையப்பட்ட ஓவியம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com