\
புதுப்படங்களுக்கு வசூல் ரீதியாக டஃப் கொடுக்கும் புஷ்பா - 2வது வாரமும் பலிக்குமா மேஜிக்?

புதுப்படங்களுக்கு வசூல் ரீதியாக டஃப் கொடுக்கும் புஷ்பா - 2வது வாரமும் பலிக்குமா மேஜிக்?

புதுப்படங்களுக்கு வசூல் ரீதியாக டஃப் கொடுக்கும் புஷ்பா - 2வது வாரமும் பலிக்குமா மேஜிக்?
Published on

புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாக இந்த வாரம் வெளியான படங்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூலில் வாரிக்குவித்து வருகிறது. இந்த வாரம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மொழியில் புதிய படங்கள் வெளியானபோதும், புஷ்பா திரைப்படம் மற்ற படங்களுக்கு வசூல் ரீதியாக டஃப்கொடுத்து வருகிறது. ரன்வீர் சிங்கின் 83 மற்றும் நானி-சாய் பல்லவியின் ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களுடன் புஷ்பா படம் வசூல் ரீதியாக மோதி வருகிறது. மேற்கண்ட படங்கள் விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்நிலையில், இரண்டாவது வாரத்திலும் புஷ்பா மேஜிக்கை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா திரைப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ் (Taran Adarsh) புஷ்பா ஹிந்தி வெர்ஷன் முதல் வாரத்தில் 26.89 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்வீட்டில், இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.166.82 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com