அல்லு அர்ஜூன் வெளியிட்ட இன்ஸ்ட்ராகிராமில் மகளின் முதல் படம்
அல்லு அர்ஜூன் தனது மகள் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் முதன்முறையாக வெளியிட்டார்.
டோலிவுட் வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகர் அல்லு அர்ஜூன். அதிரடி ஆட்டக்காரரான அல்லு ஆந்திர மக்களின் ஆல் ரைட் ஃபேவரைட் ஹீரோ. சினிமா அல்லாமல் விளம்பரங்களில் நடிக்கவும் அவரை பல கம்பெனிகள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்கின்றன. சினிமாவில் வெறும் நடிப்பு பக்கம் மட்டுமே கவனம் செலுத்தாமல் இயக்கம், நடனம், தயாரிப்பு என சகல பக்கமும் பயணிக்கிறது அல்லுவின் ஆர்வம்.
அவர் சென்னையில் பிறந்தாலும் அவருடைய சினிமா கிராஃப் தெலுங்கில்தான் உச்சத்தை தொட்டது. நடிகர் சிரஞ்சிவி மகளான சினேகா ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். கடந்த வருடம் இதே நாளில் அவர் வீட்டில் புதிய வரவாக அர்ஹா பிறந்தாள். அவரது மகளின் பிறந்தநாளான இன்று அவரது குட்டி இளவரசியின் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
என் வீட்டு குட்டி தேவதை என குறிப்பிட்டுள்ள அல்லு என்னால் நம்பவே முடியவில்லை. அதற்குள் இவர் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். அல்லு ப்ரின்ன்ஸின் முதல் போஸ்ட் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வெளியிட்ட கொஞ்ச நேரத்திற்குள் 45 ஆயிரம் பேர் விரும்பி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேல் வாழ்த்துகள் வந்து கொட்டி உள்ளது.