Allu Aravind give a marriage advise to Mrunal Thakur
Allu Aravind, Mrunal ThakurDacoit

"மிருணாள் உங்களது திருமணம்.." - அல்லு அரவிந்த் பேச்சைக் கேட்டு வெட்கப்பட்ட மிருணாள் | Mrunal Thakur

மிருணாள் நான் ஏறக்குறைய உங்களுடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் சீதாவாக நடித்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தீர்கள். அதுவே இந்தப் படத்தில் (Decoit) பல்வேறு உணர்வுகளை கடத்துவதாக இருந்தீர்கள்.
Published on

அதிவி ஷேஷ், மிருணாள் தாக்கூர் நடிப்பில் ஷானில் தியோ இயக்கிய படம் `Dacoit: A Love Story'. ஏப்ரல் 10ஆம் தேதி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படக்குழு படத்தின் வெற்றிவிழாவை நேற்று மாலை கொண்டாடினார்கள்.

அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், "மிருணாள் நான் ஏறக்குறைய உங்களுடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் சீதாவாக நடித்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தீர்கள். அதுவே இந்தப் படத்தில் (Decoit) பல்வேறு உணர்வுகளை கடத்துவதாக இருந்தீர்கள். அவ்வளவு நன்றாக நடித்தீர்கள். நான் இதற்கு முன்பு ஒருவரை ஆசிர்வதித்தேன், அந்த பெண் (லாவண்யா திரிபாதி) வருண் தேஜூக்கு மனைவியாகிவிட்டார்.

Mrunal Thakur
Mrunal Thakur

அதேபோல நீங்களும் இங்கு (தெலுங்கில்) யாரையாவது திருமணம் செய்துகொண்டு இங்கேயே செட்டில் ஆக வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காக ஆசிர்வதிக்கிறேன். அந்த ஒரே வழியில்தான் உங்களை இங்கேயே தங்கவைக்க முடியும். நீங்கள் எங்களுக்கு தேவை" என்றார். அவரின் பேச்சைக் கேட்டு மிருணாள் வெட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

Allu Aravind give a marriage advise to Mrunal Thakur
`தலைவர் 173' | மீண்டும் இயக்குநர் மாற்றமா? சிபி சக்கரவர்த்தி விலகல்? இவர்தான் புது இயக்குநர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com