இனி எல்லாம் நலமே: ரஜினிகாந்த்

இனி எல்லாம் நலமே: ரஜினிகாந்த்

இனி எல்லாம் நலமே: ரஜினிகாந்த்
Published on

இனி எல்லாம் வெற்றிகரமாகத் தான் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். விஷால் முதல் செங்கல்லை எடுத்து வைத்து, அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

சுமார் 12,00 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொண்டார். ரஜினிகாந்தும் ஒரு கல்லை எடுத்து வைத்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன், ரஜினி அருகில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க கட்டிடத்துக்கு வெற்றிகரமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இனி எல்லாம் வெற்றிகரமாகத் தான் நடக்கும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com