முதன் முறையாக இந்தியாவுக்கு வரும் கொடூர ஏலியன்!
ஏலியன்கள் இருக்கிறதா..? இல்லையா..? என்கிற விவாதம் ஒருபுறம் இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் ஏலியன்களை மையப்படுத்தி ஏராளமான படங்கள் ஹாலிவுட்டில் வெளி வந்துள்ளன. அந்த ஏலியன்கள் மனிதர்களுக்கு நன்மை செயபவையாகவும், மூமிக்கு தீங்கு செய்யும் மோசமான ஏலியன்களாக காட்டப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் பாலிவுட்டில் மட்டுமே ஏலியன் பற்றிய படங்கள் சில வெளிவந்துள்ளன. அந்தப்படங்கள் அனைத்திலும் ஏலியன்கள் நன்மை செய்யும் பாத்திரங்களில் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. க்ரித்திக் ரோஷன் நடித்த ’கோய் மில் கயா’ படத்தில் அவருக்கு உதவும் நண்பனாக ஏலியன் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அமீர்கான் படத்தில் அமீர்கானின் பாத்திரமே ஏலியன் தான். இன்னும் வெளிவந்துள்ள படங்களிலும் ஏலியன்களின் பாத்திரம் நன்மை செய்யும் பாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். இதில் தான் தற்போது மாற்றம் நிகழ இருக்கிறது.
கலங்க வைக்கும் மிக கொடூரமான ஏலியன் இந்தியாவிற்கு 2.0 படத்தின் மூலம் வர இருக்கிறது. ரஜினி, அக்ஷய்குமார் நடித்துள்ள 2.0 படத்தில் மிகக் கோடூர ஏலியனாக வருகிறார் அக்ஷய் குமார்.
ஃபர்லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே அவர் அவரது தோற்றம் காக்காயை போல இருக்கிறது என பலரும் கூறப்பட்டு வந்த நிலையில், ‘ நான் காக்காய் மனிதனாக நடிக்கவில்லை. ஏலியனாக வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் அக்ஷய்குமார். 2.0 பட விளம்பரங்களில் அதை உறுதிபடுத்தும் வகையில் ’இந்த உலகில் மனிதர்கள் மட்டுமே அல்ல’ என்கிற வாசகம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அக்ஷய்குமாருக்கு வில்லன் பாத்திரம் என்பதால் அவர் கொடூரமான தீமை செய்யும் ஏலியனாக மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.
எமி ஜாக்சன் உள்ளிட்ட நடத்திரங்கள் நடித்திருக்கும் 2.0 ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.