ஒத்திவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்! என்ன காரணம்?

ஒத்திவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்! என்ன காரணம்?

ஒத்திவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்! என்ன காரணம்?
Published on

ஏப்ரல் 14 அன்று நடைபெறுவதாக இருந்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலியாபட்டின் சகோதரர் ராகுல் பட் தகவல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. இது ஆலியாவின் மாமா ராபின் பட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது திருமணம் ஒரு வாரம் தள்ளிப்போவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இறுதி தேதி எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் தகவல் கசிந்ததால் ஏற்பட்ட பரபரப்பால் பிறகு ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் தள்ளிப்போனதாகத் தெரிகிறது.

ஆலியாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ராகுல் பட் செவ்வாயன்று அளித்த பேட்டியில், “கடந்த சில நாட்களாக வீடு அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கல்யாணம் நடக்குது, எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஏப்., 13, 14ல் கல்யாணம் இல்லை.. மீடியாக்களுக்கு தகவல் கசிந்த பின், கல்யாணம் நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டன. அதிக அழுத்தம் உள்ளதால் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 13 அல்லது 14ல் திருமணம் இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

இதற்கிடையில், இது குறித்து ஆலியாவின் தந்தை மகேஷ் பட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். திருமண தேதிகள் குறித்து கேட்டபோது, ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர் இதைப் பற்றி பொதுவில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com