\
லக்ஷ்மி பாம் படத்தின் பெயர் மாற்றம்

லக்ஷ்மி பாம் படத்தின் பெயர் மாற்றம்

லக்ஷ்மி பாம் படத்தின் பெயர் மாற்றம்
Published on: 

அக்‌ஷய் குமார் நடித்துள்ள ”லக்ஷ்மிபாம்” என்ற படத்தின் தலைப்பு, “லக்ஷ்மி” என மாற்றப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி அக்‌ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள பாலிவுட் படம் ”லக்ஷ்மி பாம்”. இந்த படத்தின் பெயர் லக்ஷ்மி தேவி மீது அவமரியாதை காட்டுவதாகவும், இந்துமக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி கர்ணி சேனா என்ற இந்து அமைப்பு படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த எதிர்ப்பினை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று தணிக்கை வாரியத்துடன் கலந்துரையாடிய பின்னர் படத்தின் தலைப்பை 'லக்ஷ்மி' என்று மாற்றியுள்ளனர்.

தமிழில் முனி, காஞ்சனா போன்ற பேய், திகில் படங்களை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் அக்ஷய் குமார் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com