அக்‌ஷய் குமாரின் ‘லக்‌ஷ்மி பாம்’ ட்ரைலர் புதிய சாதனை

அக்‌ஷய் குமாரின் ‘லக்‌ஷ்மி பாம்’ ட்ரைலர் புதிய சாதனை
அக்‌ஷய் குமாரின் ‘லக்‌ஷ்மி பாம்’ ட்ரைலர் புதிய சாதனை

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார். தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தியேட்டர்கள் இன்னும் திறக்கவில்லை. அதனால், ஓடிடியில் வெளியிடுகிறார்கள். ஆனால், லக்‌ஷ்மி பாம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில்  நவம்பர் 9 அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

https://www.youtube.com/watch?v=xw0gE8QA1W0

இந்நிலையில்,இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் வெளிவந்த நிலையில், லக்‌ஷ்மி பாம் படத்தின் ட்ரைய்லர் புதிய சாதனையை படைத்துள்ளது, ட்ரைலர் வெளியான 24 மணிநேரத்தில் இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை 80 மில்லியன் மக்கள் இதன் ட்ரைலரை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிக மக்கள் பார்க்கும்போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com