\
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் தனுஷின் ‘அட்ராங்கி ரே’

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் தனுஷின் ‘அட்ராங்கி ரே’

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் தனுஷின் ‘அட்ராங்கி ரே’
Published on

தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான ’அட்ராங்கி ரே’ படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார் தனுஷ்.தற்போது, மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ’அட்ராங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராய் இருக்கும் நிலையில், ‘அட்ராங்கி ரே’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. போஸ்டரில் புன்னகையுடன் திருமணக் கோலத்தில் தனுஷும் தூக்கத்தில் சாரா அலிகானும் இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. ட்ரைலர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com