2021 ல் வெளியான பட டிரெய்லர்களில் அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’ புதிய சாதனை

2021 ல் வெளியான பட டிரெய்லர்களில் அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’ புதிய சாதனை
2021 ல் வெளியான பட டிரெய்லர்களில் அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’ புதிய சாதனை

2021 ஆம் ஆண்டில் வெளியான பட டிரெய்லர்களில் அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ ஒரே நாளில் 23 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’ வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ரஞ்சித் திவார் இயக்கியுள்ள இப்படம், கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்‌ஷய் குமாருடன், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ’பெல்பாட்டம்’ வெளியீட்டையொட்டி நேற்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் 23 மில்லியன் வியூஸ் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் மூலம், 2021 ஆம் ஆண்டில் வெளியான பட டிரெய்லர்களில் ஒரே நாளில் அதிக பார்வைகளைக் கடந்த டிரெய்லர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘பெல்பாட்டம்’. இரண்டாவதாக இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், இம்மாதம் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் ’ஷெர்ஷா’ படத்தின் டிரெய்லர் ஒரே நாளில் 17 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com