\
‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்

‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்

‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்
Published on: 

மன்னர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாற்றுப் திரைப்படத்தில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். 

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு பிருத்விராஜ் என்ற பெயரில் எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் பிருத்விராஜாக நடிக்கும் அக்ஷய் குமார், படத்தின் டைட்டில் காட்சியை தனது 52ஆவது பிறந்தநாளான இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

முதல் முறையாக வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தில் நடிப்பதாக பதிவிட்டிருக்கும் அக்‌ஷய், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தி திரையுலகில் புகழ்பெற்ற யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிருத்விராஜ் படத்தை தயாரிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com