\
அக்‌ஷரா ஹாசனின் ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’: டீசர் வெளியிட்டார் ஸ்ருதி ஹாசன்

அக்‌ஷரா ஹாசனின் ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’: டீசர் வெளியிட்டார் ஸ்ருதி ஹாசன்

அக்‌ஷரா ஹாசனின் ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’: டீசர் வெளியிட்டார் ஸ்ருதி ஹாசன்
Published on: 

நடிகை கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது நாயகியாக நடித்துவரும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டிரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்க ராஜா ராமமூர்த்தி இயக்கும் இப்படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.

காரணம், பட போஸ்டரில் ஆரம்பித்து டீஸர் வரை அக்‌ஷரா ஹாசனே ஆக்கிரமித்துள்ளார். டீஸரை இன்று, வெளியிட்டிருப்பவர் அவரின் அக்கா ஸ்ருதி ஹாசன்தான். ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்களிடம் இருக்கவேண்டும்’ என்று சமூகத்தில் கூறப்படுவதாகும்.

ஆனால், இதனையெல்லாம் அக்‌ஷரா ஹாசன் இப்படத்தில் உடைப்பார் எனத் தெரிகிறது. பெண்களுக்கு எதிரான பிற்போக்கான சமூக கட்டமைப்புகளை ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படம் நிச்சயம் உடைக்கும் என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com