அஜித்தின் ‘ஏகே61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? - வெளியான தகவல்

அஜித்தின் ‘ஏகே61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? - வெளியான தகவல்
அஜித்தின் ‘ஏகே61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? - வெளியான தகவல்

நடிகர் அஜித்தின் ‘ஏகே61’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இந்தத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்து, கடந்த 1976-ம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘துணிவே துணை’ படத்தின் டைட்டிலைத்தான் ‘ஏ.கே.61’ படத்திற்கு வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com