மிஷ்கினின் ’பிசாசு 2’  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல்

மிஷ்கினின் ’பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல்

மிஷ்கினின் ’பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல்
Published on

’பிசாசு 2’  திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், நடிகர் அஜ்மல் ‘பிசாசு 2’ படத்தில் இணைந்திருக்கிறார். மிஷ்கின் இயக்கிய ’அஞ்சாதே’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அஜ்மல். அதற்குப் பிறகு ஹீரோவாக பல படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான ’நெற்றிக்கண்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதேபோல் இன்னும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அஜ்மல் தற்போது மிஷ்கின் இயக்கியுள்ள ’பிசாசு 2’ திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com